மூட்டு வலியை முற்றிலுமாக குணமாக்கும் முடக்கத்தான் கீரை இட்லி ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
12 March 2022, 5:42 pm

நீங்கள் எப்பேர்ப்பட்ட மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தாலும், முடக்கத்தான் கீரை உங்கள் வலி அனைத்தையும் போக்கி உங்களை குணப்படுத்தக் கூடிய ஒன்று. ரோட்டோரங்களில் வளரும் இந்த கொடியை பலர் கண்டுக்கொள்வதில்லை. பணம் எதுவும் செலவு செய்யாமல் உங்கள் மூட்டு வலியை போக்கும் இயற்கை மருந்து முடக்கத்தான் கீரை. இத்தகைய முடக்கத்தான் கீரையைக் கொண்டு இட்லி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி- 4 படி
உளுந்து- 3/4 படி
வெந்தயம்- 2 தேக்கரண்டி
முடக்கத்தான் கீரை- 2 கப்
வாழை இலை- 1
நல்லெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
*இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகிய மூன்று பொருட்களையும் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

*இதனை கிரைண்டரில் போட்டு அரைத்து கொள்ளவும்.

*அரைந்தவுடன் முடக்கத்தான் கீரையையும் சேர்த்து அரைக்கவும்.

*மாவுக்கு தேவையான உப்பு சேர்த்து கரைத்து கொள்ளுங்கள்.

*மாவு புளித்ததும் இட்லி தட்டில் வாழை இலையை வைத்து நல்லெண்ணெய் தடவி, மாவை ஊற்றவும்.

*ஆவியில் வேக வைத்து எடுத்தால் ஆரோக்கியமான முடக்கத்தான் இட்லி தயார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1690

    0

    0