மீதமான இட்லியை வைத்து வித விதமான ரெசிபிகளை செய்து பார்த்து இருப்பீர்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபியை நீங்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள். மீந்து போன இட்லியை வைத்து சுவையான முறுக்கு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீதமுள்ள இட்லி – 5
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
எள்ளு – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு அரிசி மாவு – 1/4 கப் பொட்டுக்கடலை மாவு – 1/4 கப்
எண்ணெய்
செய்முறை:
*முதலில் மீந்து போன இட்லியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்து எடுக்கவும்.
*அரைத்த இந்த மாவோடு மிளகாய் தூள், எள்ளு,
ஓமம், பெருங்காயத்தூள்,
உப்பு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு மற்றும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
*தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.
*இப்போது ஸ்டார் அச்சை முறுக்கு பிழியும் குழாயில் வைத்து சிறிதளவு மாவு சேர்த்து எண்ணெயில் பிழியும்.
*இருபுறமும் சிவந்து வந்தபின் எடுத்தால் மொறு மொறு சுவையான முறுக்கு தயார்.