சமையலை வைத்து ஒரு நபரின் கோபத்தை குறைத்து அவருடைய மனநிலையை மேம்படுத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம், உண்மைதான். நாவிற்கு ருசியான உணவை சமைத்துக் கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கோபமும் பறந்து போகும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான ரெசிபியை தான் நாம் பார்க்க இருக்கிறோம். முருங்கைக்காய் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. முருங்கைக்காய் வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் வித்தியாசமான முருங்கைக்காய் தீயல்.
செய்முறை
முருங்கைக்காய் தீயல் செய்வதற்கு ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி 4 டேபிள் ஸ்பூன் தனியா விதைகள், 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 1/2 டேபிள்ஸ்பூன் கடுகு, 5 வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, 4 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பொருட்கள் அனைத்தும் வதங்கியதும் இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும். இப்போது அதே வாணலில் மேலும் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி 1/2 மூடி அளவு துருவிய தேங்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இந்த தேங்காய் பழுப்பு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அதுவே இந்த தீயலின் சுவையை கூட்டிக் கொடுக்கக்கூடிய ரகசிய பொருள். தேங்காயை கைவிடாமல் வறுப்பது அவசியம். தேங்காய் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது வறுபட்ட தேங்காயையும் மிக்ஸி ஜாரில் இருக்கும் பிற பொருட்களோடு சேர்த்துக் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1/2 டீஸ்பூன் வெந்தயம், 1/2 டீஸ்பூன் கடுகு, ஒரு கொத்து கறிவேப்பிலை, 1/4 கிலோ அளவிற்கு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி கொண்டிருக்கும் பொழுது அதில் 1/2 டீஸ்பூன் பெருங்காயம் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து கிளறவும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்.
முருங்கைக்காய் வெந்த பிறகு ஒரு எலுமிச்சை பழம் அளவு புளியை தண்ணீரில் கரைத்து புளிக்கரைசலை சேர்க்கவும். புளிக்கரைசல் சேர்த்த பிறகு 5 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு நாம் அரைத்து வைத்துள்ள தீயல் பேஸ்டை இதில் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து குழம்பு நன்றாக கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு சுட சுட சாதத்தோடு பரிமாறவும்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.