வெங்காய சாதம்: குழந்தைகளுக்கான ஸ்பெஷல் லன்ச் பாக்ஸ் ரெசிபி!!!
Author: Hemalatha Ramkumar14 June 2022, 5:32 pm
பள்ளிகள் திறந்தாச்சு… குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் என்ன கொடுக்க வேண்டும் என்று யோசிப்பதே தாய்மார்களுக்கு தனி வேலையாக இருக்கும். இன்று நாம் பார்க்க இருக்கும் வெங்காய சாதத்தை ஒரு முறை செய்து கொடுத்தால் போதும், தினமும் இதையே செய்து தர சொல்லி குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். வாருங்கள்… இப்போது வெங்காய சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் – 2 கப் வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 3
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
உப்பு – கருவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
எண்ணெய் – 4 தேக்கரண்டி
செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
*இப்போது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
*பின்னர் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
*பிறகு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி கிளறவும்.
*கடைசியில் வடித்த சாதத்தை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறி விட்டு இறக்கினால் சுவையான வெங்காய சாதம் தயார்.
0
0