ஆரோக்கியம் மிகுந்த மொறு மொறு பச்சை பயிறு பணியாரம்!!!

Author: Hemalatha Ramkumar
29 May 2022, 3:41 pm

நார்ச்சத்துக்களும், புரதச்சத்துக்களும் நிறைந்த பச்சைப்பயிறு வைத்து மிகவும் சுவையான, ஆரோக்கியமான பணியாரம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சைப் பயிறு – 1கப்

புழுங்கலரிசி – 1/4 கப்

பச்சரிசி – 1/2 கப்

மாவு ஜவ்வரிசி – 2 டேபிள்ஸ்பூன்

பச்சைமிளகாய் – 4

சின்ன வெங்காயம் – 10

இஞ்சி – சின்ன துண்டு

கொத்தமல்லி தழை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
* முதலில் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி இரண்டையும் ஒன்றாக ஊறப் போடவும்.

* அடுத்ததாக ஜவ்வரிசி, பச்சைப்பயிறை தனித்தனியாக ஊறப் போடவும்.

*நன்கு ஊறிய அரிசியுடன் பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கும்போது முக்கால் பதம் அரைத்த நிலையில், ஜவ்வரிசி சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* அடுத்து ஊறிய பச்சைப்பயிறை தண்ணீர் வடித்து , மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்து மாவுக் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

* பின்பு நான்கு மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கவும்.

* பின்பு பணியாரக் கல்லின் குழிகளில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

* இப்போது சூடான, சுவையான, ஆரோக்கியமான பச்சைப் பயிறு பணியாரம் ரெடி.

  • வெட்கமே இல்ல? புது மருமகளை சக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நாகார்ஜூனா!
  • Views: - 870

    0

    0