மீீந்து போன இட்லியை வைத்து இப்படி ஒரு ரெசிபியா…!!!
Author: Hemalatha Ramkumar1 October 2022, 10:20 am
இட்லி மீந்து விட்டால் இனி அதனை என்ன செய்வதென்று நீங்கள் புலம்பத் தேவையில்லை. மீதமான இட்லியை வைத்தே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ருசியான ரெசிபி பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இது டிபனாக மட்டும் அல்லாமல் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் பேக் செய்து கொடுக்கலாம்.
இந்த ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ஒரு நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது ஐந்து நறுக்கிய இட்லியை சேர்த்து கிளறவும். இதன் கூடவே நான்கு தேக்கரண்டி இட்லி பொடியை சேர்த்து கிளறி இறக்கினால் ருசியான பொடி இட்லி தயார்.
0
0