இரண்டு பாக்கெட் ராகி சேமியா பாக்கெட் இருந்தால் போதும்… அருமையான காலை டிபன் தயார்!!!

Author: Hemalatha Ramkumar
23 June 2022, 7:20 pm

அன்றாடம் காலை உணவாக நாம் இட்லி, தோசை, பொங்கல் தான் செய்து சாப்பிட்டு வருகிறோம். தினமும் இவ்வாறு சாப்பிடுவதால் சலிப்பு தட்டி விடுகிறது. ஆகவே, என்றாவது ஒருநாள் ஒரு மாறுதலாக மிகவும் சுலபமான இந்த ராகி புட்டு செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
ராகி சேமியா – இரண்டு பாக்கெட்
உப்பு – 1/2 தேக்கரண்டி தேங்காய் – 1/2 மூடி சர்க்கரை – 100 கிராம் ஏலக்காய் – 5

செய்முறை:
*முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 3/4 பங்கு தண்ணீர் ஊற்றி வெதுவெதுப்பான சூட்டில் எடுத்து கொள்ளவும்.

*இந்த தண்ணீரில் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து ராகி சேமியாவை அதில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும்.

*ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் துணியைப் போடவும்.

*தண்ணீரில் இருந்து எடுத்த சேமியாவை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

*சூடான இந்த ராகி சேமியாவில் தேங்காய் துருவல், சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறினால் அருமையான ராகி சேமியா புட்டு தயார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!