ஐந்தே நிமிடத்தில் தயாராகும் மொறு மொறு டீ டைம் ஸ்நாக்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar4 September 2022, 7:11 pm
மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகள் டீயுடன் ஆசையோடு சாப்பிட நிச்சயமாக ஸ்நாக்ஸ் எதிர்ப்பார்ப்பார்கள். தினமும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு போர் அடித்து விடும். உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் வகையில் இன்று நாம் ஒரு அசத்தலான அதே சமயம் சிம்பிளான தின்பண்டத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்:
முட்டை – ஒன்று
சர்க்கரை – 4 தேக்கரண்டி ஏலக்காய் – மூன்று
ரவை – 1 1/2 கப் பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
*ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி ஒரு கரண்டி வைத்து நன்றாக அடித்து கொள்ளவும்.
*இதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி மற்றும் ஒரு கப் ரவை சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும்.
*இது தற்போது மாவு பதத்திற்கு வந்ததும் மீதமுள்ள அரை கப் ரவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
*கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.
*இப்போது நாம் தயார் செய்து வைத்த மாவில் சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான டீ டைம் ஸ்நாக்ஸ் ரெடி.