பொதுவாக டீ, காபி என்றாலே சோர்வினை போக்கி, புத்துணர்ச்சி தரக்கூடிய பானங்களாக கருதப்படுகிறது. அதிலும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் மசாலா டீயானது உங்களுக்கு உடனடி புத்துணர்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைகிறது. மசாலா சாய் என்று வட இந்தியாவில் மிகவும் பிரபலமான அறியப்படும் இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பால் – 2 கப்
ஏலக்காய் – 6
பட்டை – 1 இன்ச்
இலவங்கம் – 4
இஞ்சி – 1 துண்டு
டீ தூள் – 2 தேக்கரண்டி சர்க்கரை – 2 தேக்கரண்டி
செய்முறை:
*முதலில் ஒரு இடி கல் அல்லது மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஏலக்காய், பட்டை மற்றும் இலவங்கம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
*இஞ்சியை தட்டி தனியாக வைக்கவும்.
*இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
*தண்ணீர் கொதித்ததும் இரண்டு தேக்கரண்டி டீத்தூள் சேர்க்கவும்.
*பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் இடித்து வைத்த இஞ்சி ஆகியவை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
*டிக்காஷன் பாதியாக வரும் வரை கொதிக்க விடவும்.
*இதற்கு இடையில் இரண்டு கப் பாலை காய்ச்சவும்.
*பால் பொங்கியதும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளலாம்.
*டிகாஷன் தயாரானதும் பாலோடு சேர்த்து பின்னர் வடிகட்டவும்.
*அவ்வளவு தான்… நறுமணமான புத்துணர்ச்சி தரும் மசாலா டீ தயார்.