மீந்து போன சாதத்தில் சூடான மெது மெது இடியாப்பம்!!!
Author: Hemalatha Ramkumar18 February 2022, 6:40 pm
வீட்டில் சாதம் மீந்து விட்டாலே பெண்களுக்கு மனசு கேக்காது. ஆனால் இனியும் அப்படி கவலைப்பட தேவையில்லை. காலையில் வடித்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து இரவு உணவுக்கு பஞ்சு போன்ற இடியாப்பம் செய்து விடலாம். இப்போது சாதம் வைத்து இடியாப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம்- ஒரு கப்
பச்சரிசி மாவு- ஒரு கப்
தேவையான அளவு உப்பு
செய்முறை:
*முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஒரு கப் சாதத்தை சேர்த்து அரைக்கவும்.
*நன்கு மைய அரைத்து தனியாக ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
*அரைத்த சாதத்துடன் ஒரு கப் அரிசி மாவு சேர்த்து பிசையவும்.
*மாவை கெட்டியாக பிசைந்து விட கூடாது.
*சப்பாத்தி மாவு பதத்திற்கு இருந்தால் போதுமானது.
*இப்போது மாவை உருண்டை பிடித்து இடியாப்ப குழாயில் சேர்க்கவும்.
*இட்லி தட்டில் எண்ணெய் தடவி இடியாப்பத்தை பிழியவும்.
*இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தால் சூடான மெது மெது இடியாப்பம் தயார்.
0
0