ஒரே ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா போதும்… செமயான டேஸ்டுல காரச்சட்னி தயார்!!!
Author: Hemalatha Ramkumar14 April 2023, 7:45 pm
பொதுவாக கார சட்னி என்றாலே தக்காளி, வெங்காயம், வர மிளகாய் சேர்த்து அரைப்பது தான் வழக்கம். பெரும்பாலானவர்கள் கார சட்னியில் கருவேப்பிலை சேர்ப்பது கிடையாது. ஆயினும் நாம் உண்ணக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களிலுமே கருவேப்பிலையை சேர்ப்பது நமது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். கண்கள் முதல் உடல் ஆரோக்கியம் வரை கருவேப்பிலை பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் கருவேப்பிலை பயன்படுத்தி காரசாரமான சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் –
ஒரு தேக்கரண்டி
தக்காளி – 3
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2 கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
மல்லித்தழை – சிறிதளவு உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடலை எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி கருவேப்பிலை – ஒரு கொத்து
வர மிளகாய் – 1
செய்முறை:
*கறிவேப்பிலை கார சட்னி செய்வதற்கு முதலில் கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளலாம்.
*இப்பொழுது அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வறுக்கவும்.
*பின்னர் பச்சை மிளகாய் மற்றும் நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.
*வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.
*கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை ஓரளவு வதங்கியதும் நறுக்கி வைத்த தக்காளி சேர்க்கவும்.
*இப்பொழுது சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
*தக்காளியை இரண்டு நிமிடம் வதக்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு பொருட்கள் அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
*இந்த சட்னிக்கு தாளிப்பு கொடுப்பதற்கு 1/4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து கொட்டிக் கொள்ளவும்.
*அவ்வளவுதான் காரசாரமான கருவேப்பிலை சட்னி தயார்.
0
0