தமிழ் புத்தாண்டை அன்போடு வரவேற்க தித்திக்கும் சேமியா பாயாசம்!!!

Author: Hemalatha Ramkumar
13 April 2023, 1:31 pm

நாளை தமிழ் புத்தாண்டு. இந்த புத்தாண்டை இனிப்புடன் கொண்டாட வேண்டாமா? பண்டிகை என்றால் பாயாசம் இல்லாமல் எப்படி? இந்த பதிவில் வித்தியாசமான முறையில் சுவையான சேமியா பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதற்கு அதிக நேரம் எடுக்காது. சுலபமாக செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:
பாயாச சேமியா- ஒரு பாக்கெட்
பால்- 3/4 லிட்டர்
ஜவ்வரிசி- 2 தேக்கரண்டி
நெய்-3 தேக்கரண்டி
தேங்காய் துருவல்- 1/4 கப்
முந்திரி பருப்பு- 10
திராட்சை- 10
ஏலக்காய்- 3

செய்முறை:

*சேமியா பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சேமியாவை வறுக்கவும்.

*சேமியா வறுப்பட்டவுடன் அதனை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளலாம்.

*இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்த ஜவ்வரிசியை போட்டு வேகவைத்து கொள்ளுள்கள்.

*இப்போது பாயாசம் செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

*பால் கொதித்து வந்தவுடன் அதில் நாம் வேகவைத்த ஜவ்வரிசி மற்றும் வறுத்த சேமியாவை சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

*இதற்கு இடையில் மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பு, திராட்சை மற்றும் பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

*சேமியா வெந்ததும் அதில் நாம் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை மற்றும் தேங்காயை சேர்த்து கடைசியாக ஏலக்காய் பொடி மற்றும் தேவைபட்டால் குங்குமப்பூ சேர்த்து இறக்கினால் சுவையான சேமியா பாயாசம் தயார்.

*பாயாசம் குடிக்கும் பதத்திற்கு இருக்க வேண்டும். ஆகையால் அதிகம் கொதிக்க விட வேண்டாம். தேவைப்பட்டால் கூடுதலாக பால் சேர்த்து கொள்ளலாம்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…