உங்க வீட்ல முருங்கைக்காய் இருந்தா இன்றே இந்த ரெசிபி செய்து பாருங்க… குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க!!!

Author: Hemalatha Ramkumar
3 March 2022, 4:11 pm

“முருங்கையை நட்டவன் வெறுங்கையுடன் செல்வான்” என்று சும்மாவா சொன்னாங்க…? ஆரோக்கியத்தை அள்ளி அள்ளி தரும் முருங்கை உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயமாக இந்த டேஸ்டான முருங்கைக்காய் டிக்கி ரெசிபியை டிரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 4
முருங்கைக்காய்- 3
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள்- 1/4 தேக்கரண்டி
சோள மாவு- ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
எண்ணெய்- தேவைக்கேற்ப
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
* ஒரு குக்கரில் முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி இரண்டு விசில் வர விட்டு வேக வைத்து எடுக்கவும்.

* வேக வைத்த முருங்கைக்காயில் உள்ள சதையை மட்டும் தனியாக எடுத்து வையுங்கள்.

* இப்போது உருளைக்கிழங்கையும் குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.

* வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

* இதனுடன் தனியாக எடுத்து வைத்த முருங்கைக்காய் சதை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.

* இந்த கலவையுடன் கரம் மசாலா, சீரகத் தூள், சோள மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசையவும்.

* பின்னர் இந்த கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து வடை போல தட்டவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வடையை போடவும்.

* எண்ணெய் மிதமான சூட்டில் இருத்தல் வேண்டும்.

* இருபுறமும் சிவந்து வந்தவுடன் எடுத்து விடலாம்.

* அவ்வளவு தான்… சுவையான முருங்கைக்காய் டிக்கி தயார்.

* மாலை நேரத்தில் சூடான டீயுடன் பரிமாறி குடும்பத்துடன் என்ஜாய் பண்ணுங்க.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 1446

    0

    0