இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி கோவைக்காய் வறுவல். கோவைக்காய் என்றாலே சிலருக்கு பிடிக்காது. கோவைக்காயை வறுவலாக செய்து சாப்பிடும்போது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். வாங்க ருசியான கோவைக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் – 1/4 கிலோ
கடுகு – 1/4 ஸ்பூன்
சீரகம் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1
டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கோவைக்காயை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு நறுக்கி வைத்துள்ள கோவைக்காய் மற்றும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி விடவும்.
* அடுப்பை குறைவான தீயில் வைத்து வேகவிடவும்.
* கோவைக்காய் அரை பதம் வெந்தவுடன், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
*கோவைக்காய் வறுவல் பதத்திற்கு வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.
* இப்போது சுவையான கோவைக்காய் வறுவல் தயார்.