பத்தே நிமிடங்களில் தயாராகும் மொறு மொறு ஜவ்வரிசி வடை!!!

Author: Hemalatha Ramkumar
18 September 2024, 7:10 pm

மாலை நேரத்தில் தேநீர் அல்லது காபியோடு சாப்பிடுவதற்கு தினம் ஒரு தின்பண்டத்தை பெரும்பாலானவர்களின் வீடுகளில் செய்வது வழக்கம். பொதுவாக நமது வீடுகளில் பஜ்ஜி, போண்டா வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம். வடை என்றாலே அது பருப்பு வடை அல்லது உளுந்து வடையாக தான் இருக்கும். ஏதாவது வித்தியாசமாக செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஜவ்வரிசியில் வடை செய்து பாருங்கள். இந்த வடை வெளியில் மொறுமொறுப்பாகவும் உட்புறத்தில் சாஃப்ட் ஆகவும் சாப்பிடுவதற்கும் மிகவும் ருசியாக இருக்கும். இப்போது இந்த ஜவ்வரிசி வடை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

1/2 கப்- ஜவ்வரிசி
ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கு
1/4 கப் வறுத்த வேர்க்கடலை
ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு
ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் சிறிதளவு

கொத்தமல்லி தழை
10 கறிவேப்பிலை
ஒரு பச்சை மிளகாய்
ஒரு டீஸ்பூன் டீஸ்பூன் இஞ்சி
1/2 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள்
1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு

வடை பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

செய்முறை
ஜவ்வரிசி வடை செய்வதற்கு 1/2 கப் ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

மாலை நேரத்தில் வடை சுடுவதற்கு காலையில் இதனை நீங்கள் ஊற வைத்தால் சரியாக இருக்கும். ஜவ்வரிசி ஊறிய பிறகு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஜவ்வரிசியிலிருந்து நீர் அனைத்தும் வெளியேறும் வரை 10 நிமிடங்கள் காத்திருக்கவும்.

ஜவ்வரிசியை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதனோடு ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக் கொள்ளலாம்.

கூடவே 1/4 கப் அளவு வறுத்து இடித்த வேர்க்கடலையை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

அடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கிய 10 கறிவேப்பிலை, ஒரு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் அளவு பொடியாக நறுக்கிய இஞ்சி, 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. நாம் தயார் செய்து வைத்துள்ள கலவையில் இருந்து ஒரு சிறிய அளவு எடுத்து உருண்டையாக உருட்டி தட்டி வைக்கவும். இதே போல அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான அளவு சூடானதும் தட்டி வைத்த வடைகளை போட்டு இரண்டு பக்கமும் சிவந்து வந்தவுடன் சூடாக எடுத்து தேநீரோடு பரிமாறவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!