மாவு அரைக்காம, சிரமமே இல்லாம பத்தே நிமிடத்தில் சுவையான அவல் இட்லி!!!
Author: Hemalatha Ramkumar21 May 2022, 1:19 pm
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக இட்லி உள்ளது. தென்னிந்தியாவில் தொடங்கி நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் இட்லியை பல விதமாக செய்வார்கள். நாம் இன்று பார்க்க இருப்பது அவல் இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஊறவைத்த பச்சரிசி – 2 கப்
அவல் – 1 கப்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
தயிர் – 1 கப்
பச்சைமிளகாய் – 4
முந்திரி – 10( பொடித்தது)
இஞ்சி – 1/2 டீஸ்பூன் ( துருவியது)
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அவலை சுத்தம் செய்து நன்கு களைந்து தயிரில் ஊற வைக்கவும்.
*பின்பு அரிசி, பச்சைமிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
* அடுத்ததாக ஊற வைத்த அவலை தனியே அரைக்கவும்.
* பிறகு அரைத்த எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அவற்றுடன் பொடித்த முந்திரி, இஞ்சி துருவல், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
* பின்பு கலந்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
* இப்போது சூடான, சுவையான, மென்மையான அவல் இட்லி தயார்.