ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு சிறுகீரை பருப்பு கூட்டு ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
16 May 2022, 3:36 pm

கீரையில் நிறைய சத்துக்களும், ஆரோக்கியமும் நிறைந்துள்ளது கீரையை வாரம் ஒருமுறை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுகீரை, துவரம்பருப்பு சேர்த்து மிகவும் சுவையான இந்த கீரை குழம்பை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சிறுகீரை – 1 கட்டு

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

சீரகம் -1 டேபிள்ஸ்பூன்

பூண்டு – 10 பல்

காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயதூள் – 1/2 ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் – 2

தக்காளி – 1

துவரம் பருப்பு – 100(கிராம்)

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் கீரையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பிறகு குக்கரில் துவரம்பருப்பு, சிறுகீரை, தக்காளி, ஒரு வெங்காயம் நறுக்கி போடவும், பச்சைமிளகாய், மஞ்சள்தூள், பூண்டு ஐந்து மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வைத்து இறக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*அடுத்தாக, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பிறகு, வேக வைத்துள்ள கீரையுடன் தாளிப்பை சேர்த்து இறக்கவும்.

* இப்போது சுவையான, கமகமக்கும் சிறுகீரை பருப்பு குழம்பு தயார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1740

    0

    0