உடல் பலம் அதிகரிக்க வரகு அரிசியில் சுவையான அடை!!!

Author: Hemalatha Ramkumar
15 October 2022, 10:30 am

நாம் காலையில் சாப்பிடும் உணவானது அன்றைய நாளை தீர்ப்பானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவை காலையில் சாப்பிடும் போது சோர்வில்லாமல், எனர்ஜடிக்காக நாம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்யலாம். அப்படிப்பட்ட சத்தான உணவுகளில் ஒன்று சிறுதானியங்கள் சேர்த்து செய்யப்படும் உணவு வகைகள். நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இது வழங்க வல்லது. அந்த வகையில் வரகு அரிசையைக் கொண்டு செய்யப்படும் அடை ரெசிபி பற்றி தான் இந்த பதிவு.

தேவையான பொருட்கள்: வரகு – 1 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
உளுந்து- 1/4 கப்
வெங்காயம் – 1
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:
*முதலில் வரகு அரிசி, உளுந்து மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

*மூன்று பொருட்களும் நன்றாக ஊறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

*இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த மாவில் கொட்டவும்.

*இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றையும் மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

*தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும்.

*இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து நாம் தயார் செய்து வைத்த மாவில் இரண்டு கரண்டி ஊற்றி அடையை சட்டு எடுத்து கொள்ளுங்கள்.

*இதற்கு தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி எதுவாக இருந்தாலும் அருமையாக இருக்கும்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?