கோதுமை மாவு வைத்து சப்பாத்தி, பூரி செய்திருப்பீர்கள்… என்றைக்காவது குலாப் ஜாமூன் செய்து சாப்பிட்டு உள்ளீர்களா…??? இன்று அந்த ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். இதனை மிக ஈசியாக செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு- 1 கப்
சர்க்கரை- 2 கப்
பால்- 3/4 லிட்டர்
நெய்
ஏலக்காய் பொடி- 1 தேக்கரண்டி
செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி கோதுமை மாவு சேர்த்து மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
*வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.
*இப்போது பாலை அடுப்பில் வைத்து அது ஒரு டம்ளராக சுண்டி வரும் வரை காய்ச்சவும்.
*ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து அதில் பாலை ஊற்றி சாஃப்டாக பிசைந்து கொள்ளவும்.
*மாவு ஐந்து நிமிடங்கள் ஊறட்டும்.
*பின்னர் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உருட்டி வைக்கவும்.
*சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் சர்க்கரை, 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும்.
*சர்க்கரை கரையும் அதே நேரத்தில் எண்ணெய் சட்டியில் எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
*அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் பொரித்து வைத்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
*அவ்வளவு தான் சாஃப்டான மற்றும் சுவையான கோதுமை மாவு ஜாமூன் தயார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.