மாமிச உணவுகளில் ஆட்டுக்கறியில் செய்யப்படும் உணவுகள் மிகவும் பிரபலமானவைகளாக உள்ளன. அதிலும் ஆட்டுக்கறியில் செய்யப்படும் ப்ரைகளுக்கு மாமிச உணவு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
ஆட்டுக்கறியில் தயார் செய்யப்படும் குழம்புகளுக்கு எப்படி தனி டேஸ்ட் உள்ளதோ அதே போல்தான் இவற்றில் செய்யப்படும் ப்ரைகளுக்கும். இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் மட்டன் சுக்கா என்று அழைக்கப்படும் இந்த பிரபலமான சைடிஷ்க்கு தனிதத்துவமான டேஸ்ட் உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், இவற்றுக்கென சேர்க்கப்படும் மசாலாக்களை குறிப்பிடலாம்.
அப்படி என்னென்ன மசாலாக்களை இந்த சுக்கா ப்ரைக்கு சேர்க்க வேண்டும். இவற்றுக்கான எளிய செய்முறை தான் என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
வேக வைக்க:
ஆட்டுக்கறி – 1/2( கிலோ) எலும்பு இல்லாது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – தேவையான அளவு
வரமிளகாய் – 5
கறிவேப்பிலை – 2 கொத்து
சின்ன வெங்காயம் – 1கப்( நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 3/4 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* முதலில் மட்டன், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது , உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
* பின்பு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய், கறிவேப்பிலை , வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
* பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்பு வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும்.
*அடுத்ததாக, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
*பின் மூடி போட்டு வேக விட்டு ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடவும்.
* மட்டன் நன்கு மசாலாவுடன் கலந்து, எண்ணெய் பிரிந்து சுக்கா பதத்திற்கு வந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
* சுவையான, காரசாரமான மட்டன் சுக்கா தயார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.