வித்தியாசமான ருசியில் கத்திரிக்காய் பொடி கறி…மிஸ் பண்ணாம செய்து பாருங்க!!!
Author: Hemalatha Ramkumar11 April 2023, 10:30 am
பலருக்கு கத்திரிக்காய் பிடிப்பதில்லை. ஆனால் கத்திரிக்காயை செய்யும் விதத்தில் செய்தில் அதன் ருசி எல்லோரையும் கட்டியிழுக்கும். அப்படி ஒரு ரெசிபி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்த பதிவில் கத்திரிக்காய் பொடி கறி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 1/4 கிலோ உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
தனியா விதைகள் – 2 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 5
உப்பு – 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் -2 தேக்கரண்டி கடுகு -1 தேக்கரண்டி கருவேப்பிலை – 1 கொத்து.
செய்முறை:
*கத்திரிக்காய் பொடி கறி செய்ய முதலில் கத்திரிக்காயை நீட்டு வாக்கில் வெட்டி தண்ணீரில் போட்டுக் கொள்ளலாம்.
*இப்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
*உளுத்தம்பருப்பு லேசாக வறுப்பட்டவுடன் காய்ந்த மிளகாய், மிளகு மற்றும் தனியா சேர்த்து வறுக்கவும்.
*இவற்றை கருகி விடாமல் வறுத்து எடுக்கவும்.
*பின்னர் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
*இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*பின்னர் நறுக்கி வைத்த கத்திரிக்காயை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
*இந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிளறி மேலும் இரண்டு நிமிடங்கள் ஒரு மூடி போட்டு வேக வையுங்கள்.
*கத்திரிக்காய் குழைந்து விடக்கூடாது. முழுதாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.
*அவ்வளவு தான்… சுவையான கத்திரிக்காய் பொடி கறி தயார். இது வெரைட்டி ரைஸ், வெள்ளை சாதம், சப்பாத்தி, தோசை போன்ற அனைத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷன். நீங்களும் டிரை பண்ணி பாருங்க.
0
0