கொஞ்சம் கூட சுவையில் குறையாத ஆரோக்கியமான முருங்கை கீரை ரசம்…!!!
Author: Hemalatha Ramkumar16 February 2022, 1:43 pm
முருங்கை கீரையில் வைட்டமின், மினரல்கள் மற்றும் இரும்புச்சத்து என ஏராளமான சத்துக்கள் உள்ளன. முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் இரத்த சர்க்கரை அளவும் சீராக இருக்கும். ஆனால் கீரை என்றாலே தெறித்து ஓடும் நபர்கள் தான் அதிகம். அவர்களுக்காகவே இன்று ஒரு சுவையான கீரை ரெசிபியை பார்க்க போகிறோம். இது ஆரோக்கியமானதாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை- ஒரு கைப்பிடி
தக்காளி- 2
புளி தண்ணீர்- 1 கப்
பூண்டு பற்கள்- 5
மிளகு- ஒரு தேக்கரண்டி
சீரகம்- ஒரு தேக்கரண்டி
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
தாளிக்க தேவையானவை:
எண்ணெய்- ஒரு தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கொத்தமல்லி தழை- சிறிதளவு
செய்முறை:
*முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் முருங்கை கீரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளிக்கவும்.
*கீரை வெந்தவுடன் இதனை தனியாக எடுத்து வைக்கவும்.
*அதே வாணலியில் புளி தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
*இதில் கீரையை சேர்க்கவும்.
*இதற்கு இடையே தக்காளி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.
*அரைத்த விழுது மற்றும் பெருங்காயத் தூளை கீரை கலவையில் சேர்க்கவும்.
*இதனை தேவையான அளவு உப்பு போடவும்.
*தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கீரையில் கொட்டவும்.
*ரசம் போல பொங்கி வரும் போது கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடலாம்.
*சுவையான முருங்கை கீரை ரசம் தயார்.
0
0