முட்டை உருளைக்கிழங்கு கிரேவி: சாதம், சப்பாத்தி, பூரி எல்லாத்துக்கும் செம காம்பினேஷன்!!!

Author: Hemalatha Ramkumar
24 April 2022, 1:45 pm

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே கிடையாது. இப்படி உருளைக்கிழங்கு, முட்டையும் சேர்த்து ஒரு சுவையான ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த முட்டை உருளைக்கிழங்கு குழம்பை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி, பூரியுடன் சைடிஸாக தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். அந்த முட்டை உருளைக்கிழங்கு குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
முட்டை – 4
உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – 3
தக்காளி – 2
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி
இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் ‌ – 1 டேபிள்ஸ்பூன்
குழம்பு மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் 3/4 ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், ஒரு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*பிறகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும், பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதக்கிய உடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், குழம்பு மசாலா, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின்பு, உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி விட்டு. தண்ணீர் 1 கப் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.

* உருளைக்கிழங்கு நன்கு வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

*பிறகு, அடுப்பில் குறைவான தீயில் வைத்து விட்டு. முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும். பின் மூடி போட்டு ஐந்து நிமிடம் கழித்து முட்டை வெந்தவுடன். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

*இப்போது சுவையான முட்டை உருளைக்கிழங்கு குழம்பு தயார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 2421

    1

    0