சூடான சாதத்துல மணக்க மணக்க இருக்கும் இந்த மண் சட்டி மீன் குழம்பு ஊத்தி ஒரு முறையாவது சாப்பிட்டு பாருங்க…!!!
Author: Hemalatha Ramkumar12 July 2022, 7:26 pm
கிராமத்து சமையலுக்கு எப்போதும் தனி ருசி இருக்கும். அவர்களின் கைப்பக்குவம் முதல் அம்மி, மண்சட்டி வரை அனைத்திற்கும் இந்த சுவையில் பங்கு உண்டு. இன்று நாம் கிராமத்து முறைப்படி நாவில்எச்சில் ஊற செய்யும் சுவையான மீன் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீன் – 1/2 கிலோ
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3 மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1
தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
புளிச்சாறு – 2 தேக்கரண்டி தேங்காய் – 1/4 கப் கறிவேப்பிலை – 1 கைப்பிடி
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 2 எண்ணெய்- 4 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 கைப்பிடி
பூண்டு – 6 பல்
மிளகு – 1 தேக்கரண்டி எண்ணெய்- 4 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி மிளகு – 1 தேக்கரண்டி
செய்முறை:
*மீன் குழம்பு செய்ய முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தனியாக கலந்து வையுங்கள்.
*தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை விழுதாக அரைத்து வைக்கவும்.
*இப்போது ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய விடவும்.
*பின்னர் பூண்டு, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து தாளிக்கவும்.
*அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
*தக்காளி குழைவாக வதங்கிய பின் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
*குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 6 – 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
*குழம்பு கொதித்த பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
*பச்சை வாசனை போனதும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
*அவ்வளவு தான்.. ஶ்ரீ சுவையான மீன் குழம்பு தயார்.