சுட சுட இட்லிக்கு இந்த மாதிரி ஒரு பாசிப்பருப்பு சாம்பார்… அப்பப்பா… சுவையோ சுவை!!!

Author: Hemalatha Ramkumar
10 May 2022, 3:46 pm

சாம்பார் பல வகைகளில் செய்யப்படுகிறது. நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி பாசிப்பருப்பு சாம்பார். இந்த, சாம்பார் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் மிகவும் எளிதாக பத்து நிமிடத்தில் ‌செய்து விடலாம். வாங்க ருசியான, எளிமையான பாசிப்பருப்பு சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1/4 கப்
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
சின்ன வெங்காயம் – 12
பச்சைமிளகாய் – 3
தக்காளி – 2
பூண்டு – 3 பற்கள்
கடுகு ‌- 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
சாம்பார் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:
*முதலில் ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். இரண்டு விசில் மட்டும் விடவும்.
வேக வைத்த பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், வெந்தயம் வரமிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் கறிவேப்பிலை , சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட்டு சிறிதளவு தண்ணீர் மற்றும் ‌வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.

*பின்பு பச்சை வாசனை போகும் வரை சாம்பாரை கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இந்த பாசிப்பருப்பு சாம்பாரை சுடச்சுட இட்லியுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 1710

    0

    0