எளிமையான முறையில் அதுவும் சில நிமிடங்களில் செய்ய கூடிய குழம்பு வகைகளில் மோர் குழம்பும் ஒன்று. உடலுக்கு குளிர்ச்சி தரும் இந்த மோர்குழம்பு மற்ற சில பொருட்களுடன் சேரும் போது மிகுந்த ருசி பெறுகிறது. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சிலர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பூசணிக்காய், வெண்டைக்காய், மிளகு சேர்த்தும் இந்த மோர் குழம்பை செய்கிறார்கள்.
இந்த மோர் குழம்பை செய்யும் பொழுது சிலர் மோர் குழம்பை திரித்து விடுவது உண்டு. முதல் முறையாக மோர் குழம்பு செய்பவர்கள் காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் செய்து பார்த்தால் மோர் குழம்பு திரியாமல் அலாதியான மணம் மற்றும் சுவையுடன் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.
மோர் குழம்பு செய்வதற்கு முந்தைய நாளில் அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்சி பின்பு அதை ஆற விட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு தயிரை சேர்த்து அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் வைத்து விடவும். மறுநாள் நமக்கு தேவையான தயிர் வீட்டிலேயே தயார் ஆகிவிடும். அவசர காலகட்டங்களில் மோர் குழம்பை வைப்பதாக இருந்தால் தயிரை கடைகளில் நாம் வாங்கி கொள்ளலாம்.
இப்பொழுது கீழே மோர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்
தேவையான பொருட்கள்:
தயிர் – 1(கப்)
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி – 1டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
வரமிளகாய் – 1
தேங்காய் – 1(கப்)
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
*முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சரிசி , துவரம்பருப்பு, பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி, தேங்காய் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*தயிரை ஒரு மிக்ஸி ஜாரில் ஊற்றி ஒரு சுத்து சுத்தி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பின்னர் இந்த அரைத்த தயிரை நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கடலைபருப்புடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
*இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, போட்டு வறுக்கவும்.
*பின்பு அதில் கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
*பிறகு, அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் போர் கலவையை ஊற்றி அதில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் ஐந்து நிமிடம் வரை வேகவிடவும்.
*ஐந்து நிமிடத்திற்கு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து விட்டு பின்பு அடுப்பை அனைத்து விட்டு. அதை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு பரிமாறவும்.
*இப்போது, சுவையான போர் குழம்பு தயார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.