சிலருக்கு அசைவம் பிடிக்காது. ஆனால், அதே சுவையிலும், மணத்திலும் காளான் கிரேவி செய்து சாப்பிடலாம். காளானில்
சத்துக்களும், ஆரோக்கியமும் ஏராளமாக உள்ளன. இந்த கிரேவியை சாப்பாத்தி, இட்லி, தோசை, நாண் போன்ற ரெசிபிகளுக்கு சைடிஸாக தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். சுவையான காளான் கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
காளான் – 200(கிராம்)
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கரம் மசாலாத்தூள் – 1/2 ஸ்பூன்
தயிர் – 1 கப் (50 ml)
சீரகம் – 1/2 ஸ்பூன்
பட்டை – 1
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு – விழுது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கஸ்தூரி மேத்தி – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* காளானை கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
*பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம் சேர்க்கவும்.
* பின் அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதினை சேர்த்து வதக்கவும்.
* பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
* பொன்னிறமாக வந்ததும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* அடுத்து தயிர் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்பு மசாலா அனைத்தும் கிரேவி பதத்திற்கு வந்தவுடன், நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
* காளான் வெந்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தழை மற்றும் கஸ்தூரிமேத்தி சேர்த்து கிளறி இறக்கவும்.
* இப்போது சுவையான, கமகமக்கும் காளான் கிரேவி தயார்.
0
0