நெத்திலி மீன் தொக்கு என்று சொன்னாலே அசைவம் சாப்பிடுபவருக்கு நிச்சயமாக நாக்கில் எச்சில் ஊறும். சுட சுட சோறு மற்றும் நெத்திலி மீன் தொக்கு இருந்தால் போதும் வேறு எந்த தொட்டுக்கையும் குழம்பும் தேவையில்லை. அப்படிப்பட்ட நெத்திலி மீன் தொக்கு அசத்தலான சுவையில் எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
நெத்திலி மீன் தொக்கு செய்வதற்கு முதலில் 1/4 கிலோ அளவு நெத்திலி மீனை சுத்தம் செய்து நடுவில் இருக்கும் முல்லை நீக்கிவிட்டு ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.
இதனோடு 1/4 டீஸ்பூன் சோம்பு, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் 11/2 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த மீனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக கிளறி கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மீன்கள் உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நாம் பிசைந்து வைத்துள்ள நெத்திலி மீனை சேர்க்கவும்.
மீன் முழுவதுமாக பொரிய வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஓரளவு பொரிந்த பிறகு அதனை தனியாக எண்ணெயில் இருந்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதே கடாயில்
மீன் பொரித்த எண்ணெயில் 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்க்கவும்.
கடுகு பொரிந்தவுடன் இப்போது 2 நறுக்கிய பெரிய வெங்காயம், 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 கீறிய பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் சீரகத்தூள், 1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் 1 1/2 மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்த உடன் 2 நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறுங்கள்.
இந்த மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து இதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் ஒரு மூடி போட்டு வேக வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்தவுடன் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். பின்னர் நாம் பொரித்து வைத்த நெத்திலி மீன்களையும் சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்தவுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். இப்போது சுவையான நெத்திலி மீன் தொக்கு தயாராக உள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.