கறி வறுவலை மிஞ்சும் சுவையில் உருளைக்கிழங்கு ஃப்ரை!!!
Author: Hemalatha Ramkumar18 October 2022, 6:29 pm
உருளைக்கிழங்கு வறுவல் பிடிக்காது என்று சொல்பவர்கள் யாரேனும் உள்ளனரா என்ன…??? அனைவருக்கும் பிடித்த இந்த உருளைக்கிழங்கு வறுவலை பல விதமாக செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கறி வறுவல் போலவே செய்ரக்கூடிய உருளைக்கிழங்கு வறுவல் தான்.
தேவையான பொருட்கள்: மீடியம் அளவு உருளைக்கிழங்கு – 2
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி கருவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 3/4 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
*உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது தான் ஆரோக்கியமானது என்பதால் முதலில் உருளைக்கிழங்கு தோலில் உள்ள நுண் கிருமிகளை அழிக்க அதனை சுடுநீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
*பின்னர் அதனை எடுத்து வட்ட வடிவில் வெட்டி சாதாரண தண்ணீரில் போட்டு வைக்கவும்.
*இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*அடுத்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அதற்கான உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
*இது ஒரு ஐந்து நிமிடங்கள் வேகட்டும்.
*அடுத்தபடியாக மல்லித்தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
மேலும் ஐந்து நிமிடங்கள் குறைவான தீயில் வேகட்டும்.
*உருளைக்கிழங்கு வெந்ததும் கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.
0
0