உருளைக்கிழங்கு குருமா: அடடா… பார்க்கவே செமயா இருக்கே…எங்க வீட்ல இன்னைக்கு இந்த ரெசிபி தான்!!!
Author: Hemalatha Ramkumar29 April 2022, 1:55 pm
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே கிடையாது உருளைக்கிழங்கு வைத்து பல ரெசிபிகள் உள்ளன. நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி உருளைக்கிழங்கு குருமா . பொதுவாக குருமாவை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்கு சைடிஷ் ஆக உண்பார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின்பற்றி மக்கள் விதவிதமாக சமைத்து சுவைக்கிறார்கள். குருமாவில் பலவக உண்டு , வெஜிடபிள் குருமா, தக்காளி குருமா, மட்டன் குருமா, சிக்கன் குருமா. ஆனால், நாம் இன்று பார்க்க இருப்பது உருளைக்கிழங்கு குருமா.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4(பெரியது)
வெங்காயம் – 3
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 3
இஞ்சி பூண்டு – விழுது
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 1 கப்
கசகசா – 1/2 ஸ்பூன்
சோம்பு – 1டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
*ஒரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*பிறகு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
*பின் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
*பிறகு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
* உருளைக்கிழங்கு முக்கால் பதம் வெந்தவுடன், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.
* பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்போது சுவையான கமகமக்கும் உருளைக்கிழங்கு குருமா ரெடி.
*இந்த உருளைக்கிழங்கு குருமாவை இட்லி, தோசை, பூரி, சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.