உருளைக்கிழங்கு குருமா: அடடா… பார்க்கவே செமயா இருக்கே…எங்க வீட்ல இன்னைக்கு இந்த ரெசிபி தான்!!!

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே கிடையாது உருளைக்கிழங்கு வைத்து பல ரெசிபிகள் உள்ளன. நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி உருளைக்கிழங்கு குருமா . பொதுவாக குருமாவை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்கு சைடிஷ் ஆக உண்பார்கள்.‌ இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை‌ பின்பற்றி மக்கள் விதவிதமாக சமைத்து சுவைக்கிறார்கள். குருமாவில்‌ பலவக உண்டு , வெஜிடபிள் குருமா, தக்காளி குருமா, மட்டன் குருமா, சிக்கன் குருமா. ஆனால், நாம் இன்று பார்க்க இருப்பது உருளைக்கிழங்கு குருமா.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4(பெரியது)
வெங்காயம் – 3
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 3
இஞ்சி பூண்டு – விழுது
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 1 கப்
கசகசா – 1/2 ஸ்பூன்
சோம்பு – 1டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

*ஒரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*பிறகு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

*பின் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

*பிறகு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.

* உருளைக்கிழங்கு முக்கால் பதம் வெந்தவுடன், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.

* பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்போது சுவையான கமகமக்கும் உருளைக்கிழங்கு குருமா ரெடி.

*இந்த உருளைக்கிழங்கு குருமாவை இட்லி, தோசை, பூரி, சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

1 minute ago

அஜித் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்…? அப்பட்டமான காப்பி : அதுவும் இந்த படமா?

சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

18 minutes ago

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

47 minutes ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

1 hour ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

2 hours ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

17 hours ago

This website uses cookies.