பொட்டுக்கடலை வைத்து சட்டுன்னு இப்படி ஒரு ஸ்வீட் பண்ணலாமா…???
Author: Hemalatha Ramkumar19 October 2022, 12:07 pm
உணவு என்பது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நாம் என்ன தான் பார்த்து பார்த்து உணவுகளை கொடுத்தாலும், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அவை அனைத்தையும் சாப்பிட்டு விட மாட்டார்கள். எனவே அவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு உணவுகளை சமைப்பது மிகவும் முக்கியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அப்படியான ரெசிபி தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். சத்துக்கள் நிறைந்த பொட்டுக்கடலை அல்வா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய் பொடி- 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
நெய் – 4 தேக்கரண்டி முந்திரி பருப்பு – 6
செய்முறை:
*முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் வெல்லம் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
*வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி தனியாக எடுத்து வையுங்கள்.
*பொட்டுக்கடலையை அரைத்து மாவாக்கி வைக்கவும்.
*அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்து கொள்ளலாம்.
*இதே நெய்யில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
*மாவு வறுப்பட்டதும் வெல்லப் பாகு ஊற்றி கிளறவும்.
*இடை இடையே நெய் சேர்த்து கிளறவும்.
*கடாயில் ஒட்டாமல் அல்வா போல திரண்டு வந்ததும் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பீஸ் போட்டு கொள்ளலாம்.
*அவ்வளவு தான்… அட்டகாசமான பொட்டுக்கடலை அல்வா தயார்.
*தசைகள், எலும்பு மற்றும் நரம்புகள் வலுப்பெற இது உதவும்.
*வெளியில் வைக்கும் போது இரண்டு நாட்களும், ஃபிரிட்ஜில் வைக்கும் போது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
1
0