நெய் மணக்க மணக்க… வாயில் வைத்த உடனே கரைந்து போகும் வெண் பொங்கல்!!!

Author: Hemalatha Ramkumar
28 April 2022, 1:13 pm

நம் நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று வெண்பொங்கல். பொங்கல் பண்டிகையின் போது பலர்‌ வீட்டில் வெண்பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் செய்து இறைவனுக்கு படைத்து விட்டு. வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவர். எனினும் சாதாரண தினங்களில் கூட காலை உணவாக வெண்பொங்கல் செய்து சாப்பிடலாம். வாங்க‌ சுவையான, வெண்பொங்கல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1(கப்)
பாசிப்பருப்பு – 1/2(கப்)
பச்சைமிளகாய் – 1(கீறியது)
இஞ்சி – 1(சிறிய துண்டு)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
பால் – 1/2(கப்)
முந்திரி – 11
நெய் – 1/4(கப்)
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*முதலில் ஒரு குக்கரில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கழுவ வேண்டும். பிறகு, தண்ணீர் 5 கப் மற்றும் பால் சேர்த்து மூடி போட்டு அடுப்பில் வைக்கவும்.

*பின்பு, மூன்று விசில் விட வேண்டும். அரிசி மற்றும் பருப்பு நன்கு குழைந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*அடுத்து , அடுப்பில் ஒரு வாணலியை வைத்து மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் நான்கு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். நெய்யும், எண்ணெய்யும் நன்கு காய்ந்த பின்பு மிளகு, சீரகம், பச்சைமிளகாய், சிறிதுசிறிதாக நறுக்கிய இஞ்சி , முந்திரி, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

*பின்பு, அடுப்பை நிறுத்தி விட்டு கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து கொள்ள வேண்டும்.

*பின், தாளிப்பை பொங்களுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். பொங்கலில் உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும்.

*இறுதியாக நெய் ஊற்றி கிளறி விடவும். இப்போது சுவையான வெண்பொங்கல் தயார்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 1454

    0

    0