நம் நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று வெண்பொங்கல். பொங்கல் பண்டிகையின் போது பலர் வீட்டில் வெண்பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் செய்து இறைவனுக்கு படைத்து விட்டு. வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவர். எனினும் சாதாரண தினங்களில் கூட காலை உணவாக வெண்பொங்கல் செய்து சாப்பிடலாம். வாங்க சுவையான, வெண்பொங்கல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1(கப்)
பாசிப்பருப்பு – 1/2(கப்)
பச்சைமிளகாய் – 1(கீறியது)
இஞ்சி – 1(சிறிய துண்டு)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
பால் – 1/2(கப்)
முந்திரி – 11
நெய் – 1/4(கப்)
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*முதலில் ஒரு குக்கரில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கழுவ வேண்டும். பிறகு, தண்ணீர் 5 கப் மற்றும் பால் சேர்த்து மூடி போட்டு அடுப்பில் வைக்கவும்.
*பின்பு, மூன்று விசில் விட வேண்டும். அரிசி மற்றும் பருப்பு நன்கு குழைந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*அடுத்து , அடுப்பில் ஒரு வாணலியை வைத்து மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் நான்கு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். நெய்யும், எண்ணெய்யும் நன்கு காய்ந்த பின்பு மிளகு, சீரகம், பச்சைமிளகாய், சிறிதுசிறிதாக நறுக்கிய இஞ்சி , முந்திரி, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
*பின்பு, அடுப்பை நிறுத்தி விட்டு கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து கொள்ள வேண்டும்.
*பின், தாளிப்பை பொங்களுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். பொங்கலில் உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும்.
*இறுதியாக நெய் ஊற்றி கிளறி விடவும். இப்போது சுவையான வெண்பொங்கல் தயார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.