சமையல் குறிப்புகள்

அல்டிமேட்டான டேஸ்ட்ல கோதுமை பாயாசம் ரெசிபி!!!

நம் வீட்டில் விசேஷம் என்றாலே நிச்சயமாக மெனுவில் அன்று பாயாசம் இருக்கும். ஆனால் எப்போதும் சேமியா பாயாசம் அல்லது பருப்பு பாயாசம் என்று ஒரே மாதிரியாக செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்களும் ஆசையோடு விரும்பி குடிப்பார்கள். எனவே இன்று நாம் முற்றிலும் வித்தியாசமான சுவையில் இருக்கும் கோதுமை பாயாசம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

செய்முறை
*கோதுமை பாயாசம் செய்வதற்கு 1/2 கப் உடைத்த கோதுமையை எடுத்துக் கொள்ளவும். உடைத்த கோதுமை இல்லாத பட்சத்தில் முழு கோதுமையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

*கோதுமையை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றவும். குக்கரில் வைக்க நினைப்பவர்கள் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளலாம்.

*கோதுமை வேகும் அதே சமயத்தில் வெல்லப்பாகு தயாரிப்பதற்கு 3/4 கப் வெல்லத்தை அடி கனமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் 1/2 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*பாகுபதம் இதற்கு தேவையில்லை. வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து கொள்ளலாம்.

*அடுத்து தேங்காய் பால் செய்வதற்கு ஒரு கப் தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கெட்டியான தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

*பின்னர் அதே தேங்காயில் 3/4 கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

*மூன்றாவது முறையாக ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

*அடுத்து கோதுமை வெந்தவுடன் அதில் தயாரித்து வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கிளறவும்.

*வெல்லப்பாகுடன் கோதுமை நன்றாக பிணைந்து கேசரி பதத்திற்கு வந்தவுடன் அதில் நாம் செய்து வைத்துள்ள மூன்றாவது தேங்காய்ப்பாலை சேர்த்து 5 நிமிடம் போல வேக வையுங்கள்.

*இப்போது அளவு பாதியாக வந்தவுடன் நாம் செய்து வைத்த இரண்டாவது தேங்காய் பாலை சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

*இறுதியாக முதல் தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

*இப்போது தாளிப்பு கரண்டியில் 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் உருகியதும் அதில் 10 முந்திரி பருப்பு மற்றும் சிறிதாக நறுக்கி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுத்து பாயாசத்தில் கொட்டவும்.

*வாசனைக்காக ஒரு சிட்டிகை அளவு ஃபிரஷ்ஷாக இடித்து வைத்த ஏலக்காய் பொடி சேர்த்து சூடாக பாயாசத்தை பரிமாறுங்கள்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…

எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…

53 seconds ago

கிரிக்கெட் விளையாடும் போது நொடியில் உயிரிழந்த கல்லூரி மாணவர் : ஷாக் வீடியோ!

தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…

4 minutes ago

தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!

பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…

60 minutes ago

மருமகள் மீது தீராத மோகம்… தவறாக நடக்க முயன்ற மாமனார் : மகன் எடுத்த விபரீத முடிவு!

தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…

1 hour ago

ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…

2 hours ago

This website uses cookies.