என்னது, வீட்டிலேயே டூட்டி ஃப்ரூட்டி செய்யலாமா?

Author: Hemalatha Ramkumar
7 March 2023, 12:49 pm

90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் லிஸ்டில் கண்டிப்பாக டூட்டி ஃப்ரூட்டி இடம் பிடித்திருக்கும். இது மிட்டாய் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பொதுவாக கேக், ஐஸ் கிரீம் டாப்பிங் ஆக போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைப் பொதுவாக நாம் வீட்டில் செய்வது இல்லை. ஆனால், இதன் செய்முறை மிகவும் எளிதானது. இது செர்ரி போன்ற பழங்களில் இருந்து தயாரிக்கடுகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால், இதில் பழங்கள் சேர்க்கப்படுவது இல்லை. இதனை நாம் காயான பப்பாளி வைத்து தான் செய்ய வேண்டும். சரி, இதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

காயாக உள்ள பப்பாளி – 1

சர்க்கரை – 2 கப்

உப்பு – 1 சிட்டிகை

வெண்ணிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்

ஃபுட் கலர் – மஞ்சள், ஆரெஞ், சிவப்பு, பச்சை, மற்றும் வெள்ளை நிறங்கள் (வேறு பிடித்த நிறங்களும் பயன்படுத்தலாம்)

செய்முறை:

  • காயாக உள்ள பப்பாளியை எடுத்து அதில் உள்ள தோலை நீக்கி விடவும். 
  • பப்பாளியை இரண்டாக வெட்டி அதில் உள்ள விதைகளையும் நீக்கி விட வேண்டும்.
  • பின்னர் தோல் நீக்கி வைத்துள்ள பப்பாளியை மிகச் சிறிய கியூப்களாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இவற்றை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுமார் 5 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
  • பப்பாளி கியூப்கள் சற்று பாதி வெந்த நிலையில் அடுப்பை ஆஃப் செய்து தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரையை 2 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொத்தி வந்தவுடன் நாம் வேக வைத்துள்ள பப்பாளி கியூப்களை சேர்க்க வேண்டும்.  
  • வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கிளறி 15 நிமிடங்களுக்கு வேக விடவும். 
  • சிரப்பை தனியாக வடிகட்டி பப்பாளி கியூப்களை பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் உங்களுக்கு விருப்பமான ஃபுட் கலரைச் சேர்த்து அது கலரை நன்றாக உறிஞ்சிய பின் ஒரு டிஷூ பேப்பரில் பரப்பி வைத்து ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 420

    1

    0