அடுத்த முறை சேமியா பாயாசம் இந்த மாதிரி செய்து பாருங்கள்!!!
Author: Hemalatha Ramkumar6 August 2022, 7:30 pm
விசேஷம் என்றால் தான் பாயாசம் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் போல இருக்கும் போது சுவையான சேமியா பாயாசம் செய்து சாப்பிடலாம். பாரம்பரிய முறைப்படி சேமியா பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் சேமியா
1 லிட்டர் முழு கொழுப்பு பால்
¼ கப் தண்ணீர்
¾ கப் சர்க்கரை
2 தேக்கரண்டி நெய்
3-5 முந்திரி பருப்பு
7-8 திராட்சைகள்
2-3 பச்சை ஏலக்காய்
முறை:
1. நீங்கள் வறுக்கப்படாத சேமியா வைத்துள்ளீர்கள் என்றால், அடி கனமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும். சேமியாவைச் சேர்த்து, குறைந்த அல்லது நடுத்தர வெப்பத்தில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வறுக்கவும்.
2. இது கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
3. பழுப்பு நிறமாக மாறிய பிறகு, அடுப்பை அணைத்து விடலாம்.
4. பால், தண்ணீர், சர்க்கரை மற்றும் ஏலக்காய்ளை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைக்கவும். அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.
5. மற்றொரு அடி கனமான பாத்திரத்தில், இரண்டு தேக்கரண்டி நெய்யை சூடாக்கி சேமியாவை சேர்க்கவும். சில நிமிடங்கள் சூடாக்கி, பால் கலவையை சேர்க்கவும். கிளறி ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். தீயை குறைந்தபட்சமாக குறைத்து, மூடி வைத்து ஐந்து நிமிடம் சமைக்கவும், இடையில் ஒரு முறை கிளறவும்.
6. ஒரு தனி சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை சூடாக்கி, முந்திரியை ஒரு நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும். ஒரு நிமிடம் கழித்து, திராட்சையை சேர்த்து இரண்டையும் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து, தீயை அணைக்கவும்.
7. சில நிமிடங்கள் கொதித்ததும், நட்ஸ்களை சேர்க்கவும்.
8. பரிமாறும் பாத்திரத்தில் சூடான சேமியா பாயசத்தை ஊற்றி பருகி மகிழவும்.