வெங்காயம், தக்காளி இல்லாத சமயத்தில் சட்டென்று அரைக்க உளுத்தம்பருப்பு சட்னி ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
18 March 2022, 7:01 pm

வெங்காயம் மற்றும் தக்காளி இல்லாத நேரத்தில் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட என்ன சைட் டிஷ் செய்வது என்பது தெரியாமல் பல நாட்கள் நீங்கள் தவித்து இருக்கலாம். உங்களின் இந்த கவலையை தீர்ப்பதற்காகவே இந்த பதிவு. வெறும் உளுத்தம்பருப்பு மட்டும் வைத்து சட்னி எப்படி அரைப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு- 1/4 கப்
பூண்டு பல்- 2
தேங்காய் துருவல்- 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 5
புளி- அரை நெல்லிக்காய் அளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப

தாளிக்க:
கடுகு- 1/4 தேக்கரண்டி
சீரகம்- 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:
*முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்த பின் அதில் உளுத்தம்பருப்பை சேர்த்து சிவக்க வறுத்து கொள்ளவும்.

*அடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, தேங்காய் துருவல் மற்றும் உப்பு ஆகியவற்றை வதக்கி எடுக்கவும்.

*வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

*சட்னியை தாளிக்க எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னியில் கொட்டினால் சுவையான சட்னி ரெடி.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?