வெஜிடேரியன் கறி தோசை: இந்த மாதிரி தோசை சாப்பிட்டே இருக்க மாட்டீங்க!!!

Author: Hemalatha Ramkumar
17 October 2024, 7:34 pm

இன்னைக்கு அட்டகாசமான ஒரு கறி தோசை செய்து சாப்பிட்டு பார்ப்போமா…? புரட்டாசி மாசம் கறி சாப்பிட மாட்டீங்களா??? கவலையே படாதீங்க… இது வெஜிடேரியன் கறி தோசை ரொம்ப சுலபமா, அதே நேரத்துல நான்-வெஜ் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிற மாதிரி ஒரு வெஜிடேரியன் கறி தோசை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க…!

தேவையான பொருட்கள் 

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பூண்டு – 4 பல்

சோயா சங்ஸ் – 1 கப்

பட்டை – 1 துண்டு

கிராம்பு – 2

ஏலக்காய் – 2

பிரியாணி இலை -1 

கல்பாசி – சிறிதளவு

கரம் மசாலா – 2 டேபிள் ஸ்பூன்

பிரியாணி மசாலா –1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை 

கொத்தமல்லி

செய்முறை 

முதலில் கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு பட்டை, 2 கிராம்பு, ஒரு பிரியாணி இலை, 2 ஏலக்காய், சிறிதளவு கல்பாசி ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து 30 வினாடிகளுக்கு பொரிய விடவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி கொண்டிருக்கும் போது ஒரு துண்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை இடித்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து வதக்கவும். 

இஞ்சி பூண்டின் பச்சை வாசனை மறைந்து, வெங்காயத்தின் நிறம் மாறியதும் ஒரு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் பிரியாணி மசாலா, ஒரு டீஸ்பூன் வெறும் மிளகாய் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். 

நாம் சேர்த்த மசாலா எதுவும் கருகாமல் இருப்பதற்கு 1/2 கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.  ஒரு கப் சோயா சங்ஸை எடுத்து அதனை கொதிக்கும் தண்ணீரில் ஒரு நிமிடம் போட்டு பின்னர் தண்ணீரை வடிகட்டி சோயா சங்ஸை பிழிந்து பவுடர் செய்து வதங்கி கொண்டிருக்கும் கலவையோடு சேர்த்துக் கொள்ளலாம். 

இதையும் படிக்கலாமே: நைட் தூங்கும்போது இந்த மாதிரி அறிகுறி இருந்தா அது டயாபடீஸ் பிரச்சினையா கூட இருக்கலாம்!!!

இறுதியாக 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, ஒரு டேபிள் ஸ்பூன் நெய், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டியது தான். இப்போது கறி தோசைக்கு தேவையான நம்முடைய ஸ்டஃபிங் தயாராக உள்ளது. இதனை அப்படியே சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும். 

இப்போது கறி தோசை செய்வதற்கு தோசையை ஊற்றிவிட்டு அதில் இந்த ஸ்டஃபிங்கை நன்றாக பரப்பி இரண்டு பக்கமும் வெந்தவுடன் அப்படியே சாப்பிடலாம். இதற்கு எந்த ஒரு தொட்டுக்கையும் கூட தேவையில்லை. நான்-வெஜிடேரியன் விரும்புபவர்கள் தோசையை ஊற்றிய பிறகு ஒரு முட்டையை ஊற்றி அதன் மீது இந்த ஸ்டஃபிங்கை வைத்து சாப்பிட்டால் சுவை வேற லெவலாக தாறுமாறா இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 560

    0

    0