வெந்தயக்கீரையை வைத்து மிகவும் சுவையாக ஆரோக்கியமான இட்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை – 1 கப்
இட்லி மாவு – 4 கப்
வெங்காயம் – 2
வரமிளகாய் – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
*முதலில் வெந்தயக்கீரையை கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், பெருங்காயத்தூள், வெங்காயம், வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*பிறகு வதக்கிய அனைத்தையும் இட்லி மாவுடன் கலந்து , இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து இட்லியாக வார்த்து எடுக்கவும்.
* சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த வெந்தயக்கீரை இட்லி தயார்.
0
0