கேக் செய்ய வேண்டும் என்றால் முன்பெல்லாம் ஓவன் இருந்தால் தான் செய்ய முடியும். ஆனால் இப்போது ஓவன் இல்லாமலே சைவம் மற்றும் அசைவ பிரியர்கள் சாப்பிடும்படி முட்டை இல்லாத கோதுமை கேக் செய்யலாம். முட்டை சேர்க்காததால் கேக் கடுமையாக இருக்கும் என நினைக்க வேண்டாம். சாஃப்டான சுவை மிக்க கேக் எவ்வாறு செய்வதென பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 1 கப்
வெல்லம்- 1/4 கப்
தயிர்- 1/4 கப்
எண்ணெய்- 1/4 கப்
பேக்கிங் பவுடர்- 1 தேக்கரண்டி
நட்ஸ்- 1/4 கப்
உப்பு- 1/4 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1/4 கப் ரிஃபைன்டு எண்ணெய், 1/4 கப் பொடித்த வெல்லம் மற்றும் 1/4 கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். வெல்லம் கரைந்து வரும்படி கலந்து விடுங்கள். இதனோடு ஒரு கப் கோதுமை மாவையும் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி கொள்ளுங்கள்.
வையர் விஸ்க் இருந்தால் அதனை வைத்து கலந்து விட்டால் சுலபமாக இருக்கும். இது இல்லையெனில் கரண்டி பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். முதலில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கிளறுங்கள் அதன் பிறகு மீண்டும் 1/4 கப் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
மாவோடு ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் அல்லது 1/2 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து கொள்ளலாம். அடுத்ததாக 1/4 கப் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை பொடி செய்து அதில் சிறிதளவு கோதுமை மாவை தூவி மாவோடு கலந்து விடலாம். இவ்வாறு மாவோடு கலந்து சேர்ப்பதன் மூலம் நட்ஸ் அடியில் தங்காமல் ஆங்காங்கே கடிக்க தென்படும்.
கேக் செய்ய மாவு தயாராகி விட்டது. இப்போது ஒரு கேக் பேன் அல்லது கேக் செய்ய தோதாக ஏதேனும் ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எண்ணெய் தடவி சிறிதளவு கோதுமை மாவு தூவிய பிறகு கலந்து வைத்த மாவை அதில் ஊற்றவும். மாவை ஊற்றிய பிறகும் மேலே கொஞ்சம் பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பை தூவி விடுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு வானலை வைத்து அதில் 1/4 கப் உப்பை போட்டு அதன் மேல் ஒரு ஸ்டான்டை வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் மட்டும் சூடு செய்து கொள்ளுங்கள். பிறகு கேக் பேனை அதன் மேல் வைத்து மூடி போட்டு பதினைந்து நிமிடங்கள் வேக வைத்து கொள்ளலாம். உப்பின் சுவை கேக்கில் வரும் என்று நினைப்பவர்கள் உப்பிற்கு பதிலாக மணலை பயன்படுத்தலாம்.
பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு கம்பி வைத்து கேக் ஒட்டாமல் வந்த பிறகு அடுப்பில் இருந்து எடுத்து ஆறிய பிறகு ஒரு தட்டில் கவிழ்த்து போட்டு பிறகு திருப்பி விடுங்கள். அவ்வளவு தான். சாஃப்டான சுவையான கோதுமை கேக் தயார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.