தீபாவளி ஸ்பெஷல்: உங்க வீட்டு குட்டீஸ்களை கவர் பண்ண யம்மியான ரசமலாய் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
29 October 2024, 7:33 pm

ஒரு சில உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை நாம் கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிட்டு இருப்போம். அப்படியான ஒரு இனிப்பு வகை தான் ரசமலாய். ஆனால் ரசமலாய் செய்வது நீங்கள் நினைப்பது போல அவ்வளவு கஷ்டம் எல்லாம் கிடையாது இதனை மிக எளிதாக குறைந்த பொருட்களை வைத்து சிறிது நேரத்திலேயே செய்து விடலாம். இப்போது ருசியான ரசமலாய் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

பால்

எலுமிச்சை சாறு

முந்திரி பருப்பு

பாதாம் பருப்பு 

பிஸ்தா பருப்பு

குங்குமப்பூ

சர்க்கரை

செய்முறை

*ஒரு லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய வைக்கவும். 

*பால் பொங்கி வரும் போது அதில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். 

*பால் நன்றாக திரண்டு வரும் வரை காத்திருக்கவும். 

*திரண்டு போன பாலை வெள்ளை துணி ஒன்றில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

*இதில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை அலசி விட்டு தண்ணீர் எதுவும் இல்லாமல் நன்றாக பிழிந்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். 

*இதனை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். 

இதையும் படிக்கலாமே: காலை வெறும் வயிற்றில் இத மட்டும் பண்ணிட்டாலே மலச்சிக்கல் பிரச்சினை இருந்ததையே மறந்து போய்விடலாம்!!! 

*10 நிமிடங்கள் கழித்து  சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை கையில் வைத்து லேசாக தட்டவும். 

*ஒரு அகலமான கடாயில் ஒரு கப் சர்க்கரை மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு தயார் செய்யவும்.  

*சர்க்கரை பாகு தயாரானதும் நாம் தட்டி வைத்திருந்தவற்றை சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். 

*மற்றொரு கடாயில் 1/2 லிட்டர் அளவு பால் சேர்த்து நமக்கு பிடித்தமான பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். 

*2-3 இதழ்கள் குங்குமப்பூவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். 

*பால் ஓரளவு கெட்டியாகி ஓரங்களில் ஆடை திரண்டு வரும்போது சர்க்கரைப்பாகில் ஊற வைத்திருந்தவற்றை பாலில் சேர்த்தால் சுவையான ரசமலாய் தயார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!