5 நிமிடங்களில் சூடான முட்டைக்கோஸ் வடை!

Author: Hemalatha Ramkumar
28 February 2023, 10:42 am

மாலை வேளையில் தினமும் பஜ்ஜி, மெது வடை அல்லது பருப்பு வடை என சாப்பிட்டு போர் அடுத்து விட்டதா? அப்படி என்றால் நீங்கள் இந்த சுவையான முட்டைக்கோஸ் வடையை முயற்சி செய்து பாருங்கள். குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் இந்த முட்டைக்கோஸ் வடை. ஒரு சிலருக்கு முட்டைக்கோஸ் பொரியல் கூட பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் இந்த முட்டைக்கோஸ் வடை எவருக்கும் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.

தேவையான பொருட்கள்: 

நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸ் – 1 கப்

உளுத்தம் பருப்பு – 1/2 கப் 

கறிவேப்பிலை – ஒரு கொத்து 

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) 

கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது (2 ஸ்பூன்)

இஞ்சி – 1/2 இன்ச் அளவிலான சிறிய துண்டு 

பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு 

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் நாம் உளுத்தம் பருப்பை நன்றாக அலசி, அதனை தண்ணீரில் முக்கா மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அடுத்து முட்டைக்கோஸை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் பச்சை மிளகாய், கருவேப்பில்லை, கொத்த மல்லி எல்லாவற்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை நைஸாக துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் உளுத்தம் வடைக்கு அரைத்துக் கொள்ளும் பதத்தில் இந்த வடைக்கும் உளுத்தம் பருப்பை அதிக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • அரைத்து வைத்து உள்ள உளுத்தம் பருப்பு மாவுடன் நீங்கள் முன்னரே நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸ், நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக கிள்ளிய கருவேப்பில்லை, நறுக்கிய கொத்த மல்லி, நைஸாக துருவிய இஞ்சி முதலியவற்றை சேர்த்து கலந்து விடவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 
  • வாணலில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் வடை மாவை தட்டி பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

சாஃப்ட் ஆன கிரிஸ்பி ஆன வடைக்கான சூப்பர் டிப்ஸ்:

  • இந்த வடை மாவில் நீங்கள் கொஞ்சம் சாதத்தை அரைத்து சேர்த்தால் வடை இன்னும் சுவையாக இருக்கும். சாதத்திற்கு பதில் வேக வைத்த உருளைக் கிழங்கையும் சேர்க்கலாம்.
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 590

    0

    0