ஒரு முறை இந்த மாதிரி தேங்காய் துவையல் செய்து பாருங்க…!!!
Author: Hemalatha Ramkumar2 July 2022, 7:15 pm
தேங்காய் வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம். தேங்காய் என்றாலே தனி சுவை தான். குழம்பு, பொரியல், இனிப்பு என்று தேங்காய் பார்க்காத ரெசிபிகளே இல்லை.அந்த வகையில் அனைத்து வகையான குழம்பு சாதம், வெரைட்டி சாதங்கள், ரசம் சாதம் என அனைத்திற்கும் பொருந்தும் தேங்காய் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
பொட்டுக்கடலை – ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
வரமிளகாய் – 2 கருவேப்பிலை – ஒரு கொத்து
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
வெல்லம் – ஒரு சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
*துவையல் அரைக்க முதலில் அரை மூடி தேங்காயை துருவி எடுத்து கொள்ளலாம்.
*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு மற்றும் தோல் நீக்கிய வேர்க்கடலையை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
*இதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டுஅரைக்கவும்.
*இதனோடு சேர்த்து தேங்காய், வர மிளகாய்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
*கடைசியாக புளி சேர்த்து அரைக்கவும்.
*மைய அரைக்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
*கடைசியில் இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் சுவையான தேங்காய் துவையல் தயார்.
0
0