காய்கறி எதுவும் இல்லாமல் பத்தே நிமிடத்தில் தயாராகும் கம கம சாம்பார்!!!

Author: Hemalatha Ramkumar
2 September 2022, 7:37 pm

வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரத்தில் உடனடியாக தயாராகும் இன்ஸ்டன்ட் கிள்ளி போட்ட சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம். இதனை பத்தே நிமிடத்தில் எளிதாக செய்து விடலாம். இந்த இன்ஸ்டன்ட் சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 150 கிராம் பூண்டு பல் – 4
பச்சை மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
வரமிளகாய் – 5
பெரிய வெங்காயம் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – ஒன்று
புளி – சிறு எலுமிச்சை பழம் அளவு

செய்முறை:
*முதலில் ஊற வைத்த துவரம் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து, குக்கரில் போடவும்.

*இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தக்காளி, உப்பு, பெருங்காயம் மற்றும் சிறிதளவு எண்ணெய் ஆகியவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

*பருப்பு வெந்ததும் அதனை மத்து போட்டு கடைந்து வையுங்கள்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய விடவும்.

*இப்போது கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

*அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

*தக்காளி குழைய வதங்கிய பின் மசித்து வைத்த பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

*சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

*ஒரு கொதி வந்தவுடன் புளி கரைசல் ஊற்றி இறக்கினால் சுவையான சாம்பார் தயார்.

*இந்த சாம்பார் சாதம், இட்லி, தோசை அனைத்திற்கும் அற்புதமாக இருக்கும்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!