இந்த மாதிரி செய்தால் ரசம் பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!!!

Author: Hemalatha Ramkumar
13 November 2022, 7:17 pm

பொதுவாக தமிழ்நாட்டின் உணவானது ரசம் இல்லாமல் முடிவடையாது. உடம்பு சரியில்லாமல் போகும் போது ரசம் சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி, உடல் தேறி வர உதவும். ரசத்தில் மிளகு, சீரகம் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுவதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த மழைக்காலத்திற்கு ஏற்ற காரசாரமான ஒரு ரசம் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: புளி – எலுமிச்சை பழ அளவு
தக்காளி -2
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி மிளகு -1 1/2 தேக்கரண்டி மிளகாய் -2
தோல் உரிக்காத பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 3 நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி கருவேப்பிலை கொத்தமல்லி – 1 கைப்பிடி

செய்முறை:
*முதலில் புளியை ஊற வைத்து புளித் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

*அடுத்து ஒரு உரலை எடுத்து அதில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி காம்புகள் ஆகியவற்றை இடித்து கொள்ளவும்.

*அனைத்து பொருட்களும் இடிப்பட்டவுடன், பூண்டு சேர்த்து அதனையும் இடித்து வைத்துக்கொள்ளவும்.

*இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*இப்போது இதில் நாம் இடித்து வைத்த பொருட்களை சேர்த்து வதக்கவும்.

*இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் அதில் தக்காளியை பிழிந்து அதனையும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

*மேலும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.

*மேலும் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சிறிது சிறிதாக நறுக்கி போடவும்.

*ரசம் நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். கொதிக்க விடக் கூடாது.

*அவ்வளவு தான்… காரசாரமான ரசம் தயார். சுட சுட சாதத்திற்கு இந்த ரசத்தை ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!