காய்கறிகள் சேர்த்த ராகி சூப்… அட்டகாசமா இருக்கும்.. டிரை பண்ணி பாருங்க!!!
Author: Hemalatha Ramkumar25 January 2023, 1:05 pm
ராகி சூப் ஒரு சுவையான இரவு உணவு. ராகி மாவுடன் பல்வேறு காய்கறிகள் சேர்க்கப்படும் போது இந்த சூப் சுவையானது மட்டுமல்ல, உங்கள் அன்றாட தேவைகளுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து கொண்ட சமச்சீரான உணவாக அமைகிறது.
நீங்கள் டயட் அல்லது எடைக் குறைப்பு திட்டத்தில் இருந்தால், இந்த சூப் உங்களுக்கு சிறந்த முறையில் வேலை செய்யும்.
ராகி வெஜிடபிள் சூப் செய்முறை:-
ராகி சூப் சூப் தேவையான பொருட்கள்
* 1 கப் கலந்த காய்கறிகள் (கேரட், பட்டாணி, காலிஃபிளவர் மற்றும் பீன்ஸ்)
* 2 டீஸ்பூன் ராகி மாவு
*1 தேக்கரண்டி மிளகு தூள்
*உப்பு தேவையான அளவு
* 1 டீஸ்பூன் நெய்
*1 பிரியாணி இலை
* பூண்டு 4 பல்
* 2 மற்றும் ¼ கப் தண்ணீர்
செய்முறை:
* நெய் சேர்த்து பிரியாணி இலை மற்றும் நறுக்கிய பூண்டை 2 நிமிடம் வதக்கவும்.
*கலந்த காய்கறிகளைச் சேர்த்த பிறகு, ஒரு நிமிடம் வதக்கவும்.
* இதனுடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
* நன்கு கலந்து உப்பு சேர்க்கவும்.
* கலவையை 6 முதல் 9 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
* காய்கறிகள் சாஃப்டாக வேண்டுமெனில் மேலும் 2 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் எடுத்து அதனுடன் 2 டீஸ்பூன் ராகி மாவை கலக்கவும். கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
*சூப்பில் கலந்து வைத்த ராகி கலவையைச் சேர்க்கவும்.
*மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
* கலவையை 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இடை இடையே கலந்து விடவும்.
* அடுப்பை அணைக்கவும். பரிமாறுவதற்கு முன், பிரியாணி இலையை அகற்றவும்.
*வெஜிடபிள் ராகி சூப் தயார். சூடாக பரிமாறவும்!