சிம்பிளா செம டேஸ்டா ஹெல்தியான வேர்க்கடலை சட்னி ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
17 May 2022, 12:42 pm

வேர்கடலையில் உடலுக்கு
ஆரோக்கியம் அளிக்கும் வைட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. தக்காளி சட்னி, கார சட்னி, தேங்காய் சட்னி எனப் பல வகையான சட்னி வகைகள் உண்டு. ஆனால், ஆரோக்கியமும், சத்தும் நிறைந்த இந்த வேர்க்கடலை சட்னியை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை – 1/2 கப்

சின்ன வெங்காயம் – 10

இஞ்சி – சிறிதளவு

பூண்டு – 3

புளி – சிறிதளவு

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தேங்காய் – 4 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

வரமிளகாய் – 1

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:
* முதலில் அடுப்பில் வாணலியை வைத்து வேர்க்கடலையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, வரமிளகாய், கறிவேப்பிலை நான்கு இலை சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதக்கிய அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

* பின்பு வேர்க்கடலை, தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

*அரைத்த வேர்க்கடலை சட்னியை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.

* அடுத்ததாக அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

*பிறகு அந்த தாளிப்பை வேர்க்கடலை சட்னியில் ஊற்றி பரிமாறவும்.

* இப்போது வேர்க்கடலை சட்னி தயார்.

* இந்த வேர்க்கடலை சட்னியை சுடச்சுட இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!