பச்சை பயறு பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இத விரும்பி சாப்பிடுவாங்க!!!
Author: Hemalatha Ramkumar20 May 2022, 1:18 pm
பச்சைப்பயறு மசியல் மிகவும் ஆரோக்கியமும், சத்தும் நிறைந்த ரெசிபி. வாரத்தில் ஒரு முறையாவது பயிறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்த பச்சைப்பயறு மசியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
தக்காளி – 2
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
*முதலில் பச்சை பயறுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* பின்பு அப்படியே அடுப்பில் வைத்து பச்சைமிளகாய் சேர்த்து வேகவிடவும்.
* அடுத்ததாக இன்னொரு அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து , நறுக்கிய வெங்காயம், தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
* பின்பு அப்படியே பச்சைப்பயறை ஒன்றிரண்டாக மசித்து சேர்க்கவும்.
* பின்னர் வதங்கி கொண்டிருக்கும் கலவையோடு நீர் சேர்த்து சற்று தளர்ச்சியாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.
* பின்பு புதினா, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* இப்போது சுவையான கமகமக்கும் பச்சைப்பயறு மசியல் தயார்.
* விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.