இட்லிக்கு பதில் இந்த ஹைதராபாத் ஸ்பாட் இட்லி ட்ரை பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
4 March 2023, 3:39 pm

தினமும் இட்லி தோசை என்று செய்து ஏதாவது புதிய பிரேக்ஃபாஸ்ட் அல்லது டின்னர் ஆப்ஷன் குறித்து தேடுகிறீர்களா? அப்பொழுது உங்களுக்கு இந்த ஹைதராபாத் ஸ்பாட் இட்லி ஒரு சிறந்த ஆப்ஷன் ஆக இருக்கும். இது ஒரு சிறந்த ஆப்ஷன் என்பதற்கான மற்றொரு காரணம் இந்த ஸ்பாட் இட்லிக்கு சைட் டிஷ் தனியாக செய்ய வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. சரி இதன் எளிய செய்முறை குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தோசை மாவு 

வெங்காயம் – பொடியாக நறுக்கியது – 1 கப் 

தக்காளி – பொடியாக நறுக்கியது – 1/2 கப் 

கரம் மசாலா – 1 ஸ்பூன் 

கொத்த மல்லி தழைகள் – சிறிய அளவில் 

கறிவேப்பிலை – ஒரு கொத்து 

எண்ணெய் – 2 ஸ்பூன் 

பட்டர் – 1 கியூப்

செய்முறை:

  • முதலில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்து கல்லை சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து பாதி கட்டி பட்டர் போட்டு, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் சேர்க்கவும். 
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம் மசாலா சேர்க்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் வதக்கி வைத்து உள்ளதை நன்று பாகங்களாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • அந்த நான்கு பாகங்களில் தோசை மாவு ஊற்றவும்.  
  • அதற்கு மேல் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை தூவிக் கொள்ளவும்.
  • மீதமுள்ள பட்டரை உருக்கி ஸ்பாட் இட்லியை சுற்றி ஒற்றிக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். 
  • வெந்தவுடன் திருப்பி போடவும்.

அவ்வளவு தான் சுவையான ஸ்பாட் இட்லி தயார். நீங்கள் கேரட், இட்லி போடி போன்றவைற்றையும் சேர்த்து தூவலாம். இன்னும் ருசியாக இருக்கும். பட்டர், எண்னெய் முதலியாற்றை உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். முன்பு சொன்னது போல், நீங்கள் இதனை எந்த சைட் டிஷும் இல்லாமல் சாப்பிடலாம். 

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 558

    0

    0